உதகையில் அனுமதியின்றி பாறைகள் உடைப்பு: போலீசார் வழக்கு பதிவு

உதகையில் அனுமதியின்றி பாறைகள் உடைப்பு: போலீசார் வழக்கு பதிவு
X

ஊட்டியில் அனுமதியின்றி உடைக்கப்பட்ட பாறைகள்.

உதகையில் அனுமதியின்றி பாறைகளை உடைத்த விவசாயி மீது புதுமந்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க பாறைகள் உடைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. கட்டுமான பணியின் போது பாறைகளை உடைக்க வருவாய் துறையிடம் அனுமதி பெற வேண்டும்.

ஊட்டி தாலுக்காவுக்கு உட்பட்ட கோழிப்பண்ணை பகுதியில் பட்டா நிலம் மற்றும் அரசு நிலத்தில் தடையை மீறி பாறைகள் உடைக்கப்பட்டதாக புகார் வந்தது.

உதகை ஊரக கிராம நிர்வாக அலுவலர் பிரீத்தா தணிக்கையில் ஈடுபட்டு இருந்த போது, பாறைகள் வெடிமருந்து பயன்படுத்தி கள்ளத்தனமாக 2,500 கற்கள் உடைக்கப்பட்டு மலைச்சரிவில் வாகனங்கள் செல்ல முன் அனுமதியின்றி மண் சாலையில் கற்களால் பாதை அமைக்கப்பட்டிருந்தது.

வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தொடர் விசாரணையில் பட்டா நில உரிமையாளர் கோழிப்பண்ணை பகுதியை சேர்ந்த கோபால் அனுமதியின்றி பாறைகளை உடைத்து அரசு சொத்துக்களை சேதப்படுத்தியது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் பிரீத்தா கொடுத்த புகாரின் அடிப்படையில் ஊட்டி புதுமந்து போலீசார் விவசாயி கோபால் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Tags

Next Story
ai marketing future