உதகை நகராட்சி: அக்.,8 க்குள் கடை வாடகை செலுத்த ஆணையாளர் உத்தரவு

உதகை நகராட்சி: அக்.,8 க்குள் கடை வாடகை செலுத்த ஆணையாளர் உத்தரவு
X

உதகை நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி.

உதகை மார்க்கெட்டில் இதுவரை வாடகை செலுத்தாமல் உள்ள 183 கடைகள் 25 சதவீத வாடகை செலுத்தாவிடில் கடைகள் ஏலம் விடப்படும் என ஆணையாளர் தகவல்.

உதகை நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

உதகை நகராட்சி மார்க்கெட் மற்றும் வெளிப்புறப் பகுதிகளில் வாடகை செலுத்தாத 757 கடைகளுக்கு கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி நகராட்சி மூலம் சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. வாடகை செலுத்தாததால் நகராட்சிக்கு ரூ.35 கோடி பாக்கி இருந்தது. சீல் வைத்த பின்னர் இதுவரை ரூ.13 கோடியே 35 லட்சம் கோடி நிலுவைத் தொகை வசூலாகி இருக்கிறது.

கடைக்காரர்கள் 25 சதவீதம், 50 சதவீதம், 75 சதவீதம் என வாடகையை 480 கடை உரிமையாளர்கள் செலுத்தி உள்ளனர். நிலுவைத் தொகையை 100 சதவீதம் 94 கடைக்காரர்கள் செலுத்தி இருக்கின்றனர். சீல் வைத்தும் 183 கடைகள் இதுவரை வாடகை செலுத்தவில்லை.

ஏற்கனவே ஒரு மாதம் கால அவகாசம் அளித்தும் வாடகை செலுத்தாததால், அந்த கடைகள் மறு ஏலம் விடப்படும். இதை தவிர்க்க வருகிற 8-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. அதிலும் வாடகை செலுத்தாவிட்டால் அந்த கடைகள் மறு ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும்.

பொருட்களை காலி செய்து, ஏலம் மூலம் மற்றவர்களுக்கு கொடுக்கப்படும். நிலுவைத் தொகை வசூலிக்கப்பட்டதை தொடர்ந்து நகராட்சியில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ரூ.97 லட்சம் மதிப்பில் பண பலன்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் கூறினார். செய்தியாளர்களின் சந்திப்பின்போது நகராட்சி வருவாய் அலுவலர் பிரான்சிஸ் உடனிருந்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!