நடப்பு கல்வி ஆண்டில் உதகை மருத்துவ கல்லூரி செயல்படும்: எம்பி ஆ.ராசா

நடப்பு கல்வி ஆண்டில் உதகை மருத்துவ கல்லூரி செயல்படும்: எம்பி ஆ.ராசா
X

மருத்துவ கல்லூரி பணிகளை ஆய்வு செய்யும் எம்பி ஆ.ராசா.

நடப்பு கல்வி ஆண்டில் 150 மாணவர்களுடன் உதகை மருத்துவக் கல்லூரி செயல்படும் என நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்தார்.

உதகையில் பிங்கர் போஸ்ட் பகுதியில் 447.32 கோடி ரூபாய் மதிப்பில் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் நடந்து வரும் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா இன்று பார்வையிட்டார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: நடப்புக் கல்வி ஆண்டில் 150 மாணவர்களுடன் அரசு மருத்துவமனை கல்லூரி செயல்படும். மேலும் பேரிடர் காலம் மற்றும் இடர்பாடுகளால் ஏதேனும் பணியில் தாமதமானால் மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற்று மாற்று இடமான அதே பகுதியில் உள்ள HPF அல்லது வேறு இடத்தில் மருத்துவக் கல்லூரி செயல்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

மேக் இன் இந்தியா போன்று மேக் இன் தமிழ்நாட்டிற்கான வாய்புகள் உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் தமிழக அரசு எடுத்து வரும் வேகம் உத்வேகத்தை அளித்துள்ளது. நிச்சயமாக தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்பாடுகளால் அனைத்து மாவட்டங்களும் வளர்ச்சி பெறும் என தெரிவித்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!