உதகை: மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கல்

உதகை: மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கல்
X

பைல் படம்.

0423-2440725 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம் .

நீலகிரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் இதுவரை 9,428 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 3 ஆயிரத்து 263 மாற்றுத்திறனாளிகள் மட்டுமே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை பெற்று உள்ளனர்.

நாடு முழுவதும் ஒரே மாதிரி தேசிய அடையாள அட்டை 4,176 பேர் பெற்று இருக்கின்றனர். எனவே, இதுவரை முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு பெறாத மாற்றுத்திறனாளிகள், தேசிய அடையாள அட்டை பெறாதவர்கள் மருத்துவச் சான்று, ரேஷன் அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல், 2 புகைப்படம் ஆகியவற்றுடன் உதகை தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

மேலும் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை 0423-2440725 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!