உதகையில் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்
கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு குழு தலைவர் நீலகிரி எம்.பி. ஆ.ராசா தலைமை தாங்கி பேசினார். வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மத்திய, மாநில அரசு பணிகள் ஒதுக்கப்பட்டு, அதில் முடிக்கப்பட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அனைத்துத்துறை வளர்ச்சி பணிகள் குறித்த விவரங்கள் கேட்டறியப்பட்டது.
கூட்டத்துக்கு பின்னர் ஆ.ராசா எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நீலகிரியில் 2019-2020-ம் ஆண்டு 80 சதவீதம், 2020-2021-ம் ஆண்டு 70 சதவீத வளர்ச்சி பணிகள் முடிந்து உள்ளன. சமவெளிப் பகுதிகளில் இருந்து நீலகிரிக்கு கொண்டு வரப்படும் கட்டுமான பொருட்கள் செலவினம் அதிகம் ஆகும்.
இதை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்டத்தில் முதல்வரின் பசுமை வீடுகள் திட்டத்தில், வீடுகள் கட்டுவதற்கு நிதி தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். ஜல் ஜீவன் மிஷன் திட்டம் 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu