உதகை - குன்னூர் சாலையில் தீடீர் தீ விபத்து: போலீசார் விசாரணை

உதகை - குன்னூர் சாலையில் தீடீர் தீ விபத்து: போலீசார் விசாரணை
X

உதகையில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் குடியிருப்பு பகுதியை ஒட்டிய பகுதியில் திடீர் தீ ஏற்பட்டது.

உதகையில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் குடியிருப்பை ஒட்டிய பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

உதகை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கடுமையான வெயில் நிலவுகிறது. இதனால் வனப் பகுதிகளை ஒட்டிய பகுதிகள் வறட்சியாக காணப்படுகிறது.

பல பகுதிகளில் தீப்பிடிக்காத வாழு வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், உதகையில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் சற்று முன்பு திடீரென குடியிருப்பு பகுதியை ஒட்டிய பகுதியில் திடீர் தீ ஏற்பட்டது. மளமளவென தீ பரவி அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

உடனடியாக சம்பவ பகுதிக்கு வந்த தீயணைப்புத் துறையினர் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!