பொங்கல் விழாவை கோலாகலமாக கொண்டாடிய தோடரின மக்கள்
பொங்கல் பண்டிகையின்போது பாரம்பரிய நடனமாடிய தோடர் இன மக்கள்.
உதகையில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் படப்பிடிப்பு தளம், பகல்கோடு மந்து எனும் சுற்றுலா மையம் தோடரின பழங்குடியினரால் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தைத்திருநாள் பொங்கல் விழாவையொட்டி நேற்று இந்தப் பகுதியில் தோடர் இன பழங்குடியின மக்கள் சிறப்பாக பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். பிற பகுதிகளில் இருந்து வருகை புரிந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த சமத்துவ பொங்கல் விழாவை கண்டு ரசித்தனர்.
முன்னதாக சூரியபகவானுக்கு பூஜைகள் செய்து பொங்கல் படைக்கப்பட்டது. இங்கு வருகை புரிந்திருந்த சுற்றுலா பயணிகளுக்கு பொங்கல் வழங்கப்பட்டது. பின்பு அவர்களின் பாரம்பரிய முறைப்படி நடனமாடினர். இதை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu