பொங்கலையொட்டி உதகை நகர பா.ஜ.க. சார்பில் பெண்களுக்கு கோலப் போட்டி

பொங்கலையொட்டி உதகை நகர பா.ஜ.க. சார்பில் பெண்களுக்கு கோலப் போட்டி
X

உதகை நகர பா.ஜ.க. சார்பில் பெண்களுக்கு கோலப்போட்டி நடத்தப்பட்டது.

பொங்கலையொட்டி உதகை நகர பா.ஜ.க. சார்பில் பெண்களுக்கு கோலப் போட்டி நடத்தி பரிசு வழங்கப்பட்டது.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு இல்லங்களிலும் வண்ணமயமான கோலங்களிட்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதில் கோலங்கள் முக்கிய இடம் பெறுகின்றன. குறிப்பாக பொங்கல் மாட்டு பொங்கல் நாட்களில் பல போட்டிகள் நடத்தப்பட்டு பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் உதகை நகர பா.ஜ.க. சார்பில் கோலப்போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் 50 க்கும் மேற்பட்ட இல்லத்தரசிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் வண்ண-கோலங்களிட்டு போட்டியில் கலந்துகொண்டனர்.

கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் இரண்டு மற்றும் மூன்றாம் பரிசுகள் வழங்கப்பட்டன. மற்றும் கலந்துகொண்ட அனைவருக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டன.

பரிசு பெற்ற பெண்மணிகள் கூறுகையில் பா.ஜ.க. சார்பில் பெண்களை ஊக்கப்படுத்தும் விதமாக இருந்ததாகவும் இதுபோன்ற போட்டிகள் நடத்துவதன் மூலம் இளைய தலைமுறைக்கும் தமிழர் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் போற்றும் வகையில் கோலப் போட்டிகள் ஒவ்வொரு பொங்கல் அன்றும் நடத்தப்பட வேண்டும். இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த பா.ஜ.க.விற்கு நன்றிகளைத் தெரிவிப்பதாக தெரிவித்தனர்.

கிளைத் தலைவர் தீபா ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர்கள் சுரேஷ்குமார், ஸ்ரீ தேவி, மாவட்ட பொருளாளர் தர்மன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பட்டாபிராமன், வர்த்தக அணி துணைத் தலைவர் நாகராஜ், நகர துணைத்தலைவர்கள் அனிதா, சுதாகர், நகர செயற்குழு உறுப்பினர் சுரேஷ், உட்பட பா.ஜ.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!