வனக்குற்றங்களை கண்டறிய நீலகிரிக்கு அழைத்து வரப்பட்ட 2 மோப்பநாய்கள்!

வனக்குற்றங்களை கண்டறிவதற்காக, நீலகிரி மாவட்டத்துக்கு 2 மோப்பநாய்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அதிக வனப்பகுதி கொண்ட மாவட்டமாக நீலகிரி உள்ளது. 65 சதவித வன பகுதி கொண்டுள்ள இந்த மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முதுமலை புலிகள் காப்பகம், முக்குருத்தி பூங்கா, நீலகிரி வனக்கோட்டம், கூடலூர் வனக்கோட்டம் உள்ளிட்ட வனப்பகுதிகள் உள்ளன. ஏராளமான காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள் உள்பட வன விலங்குகள் உள்ளன.

எனவே, வனக்கொள்ளை, வன விலங்குகள் வேட்டை போன்ற குற்றச்செயல்களை தடுக்கும் பணியிலும், கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில், குற்றங்களில் ஈடுபடுவோரை உடனடியாக கண்டறிவதற்காக, வனத்துறை சார்பாக சமீப காலமாக மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுகிறது.

தமிழக வனத்துறைக்கு, முதன்முதலாக 2017-ஆம் ஆபர் என்ற மோப்பநாய், மத்திய பிரதேசத்தில் இருந்து வரவழைக்கபட்டது. முதுமலை புலிகள் காப்பகத்தில் வைத்து பராமரிக்கபட்டு வந்த அந்த நாய், உடல் நலக்குறைவு காராணமாக, கடந்தாண்டு இறந்தது.

இந்நிலையில் தற்போது 2 மோப்பநாய்கள் நீலகிரி மற்றும் கூடலூர் வன கோட்டங்களுக்கு வழங்கபட்டுள்ளன. காலிகன் என்ற ஆண் மோப்பநாயும், அதவை என்ற பெண் மோப்பநாயும் வழங்கபட்டுள்ளன. மதுரை அருகே உள்ள வைகை வனத்துறை பயிற்சி கல்லூரியில் இந்த நாய்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை பராமரிக்கவும் வனக்குற்றங்கள் ஏற்படும் இடங்களுக்கு அழைத்து சென்று குற்றவாளிகளை பிடிக்கவும், பயிற்சி பெற்ற 2 பேர் நியமிக்கபட்டுள்ளனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil