உதகை அருகே அணையில் மூழ்கி இருவர் உயிரிழப்பு; ஒருவர் உடல் தேடும் பணி தீவிரம்

உதகை அருகே அணையில் மூழ்கி இருவர் உயிரிழப்பு; ஒருவர் உடல் தேடும் பணி தீவிரம்
X

நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களை மீட்க போராடும் தீயணைப்பு வீரர்கள்.

உதகை அருகே எமரால்டு அணையில் தவறி விழுந்து இருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உதகை அருகே எடக்காடு நடுஹட்டியை சேர்ந்த மணிகண்டன். இவருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் எமரால்டு ஒண்டிவீடு பகுதியில் உள்ளது.

இந்த தோட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் விருந்தை முடித்து சிலர் வீடு திரும்பினர். அப்போது, சிலர் எமரால்டு அணை அருகே சென்றுள்ளனர்.

அங்கு சென்ற அவர்களில், எடக்காடு நடுஹட்டியை சேர்ந்த சரவணன் ( 37 )அணையில் தவறி விழுந்துள்ளார். இவரை காப்பாற்ற அதே பகுதியை சேர்ந்த ராமராஜ் ( 45 ) அணையில் குதித்துள்ளார். ஆனால், இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

தகவலின் பேரில் அங்கு வந்த எமரால்டு போலீசார், தீயணைப்பு உதவியுடன் ஒருவரின் உடலை மீட்டனர். மற்றொருவரின் உடலை தேடும் பணியில் தீயணைப்பு துறை ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!