உதகையில் வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு குண்டுகள் முழங்க வீர வணக்கம்

உதகையில் வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு குண்டுகள் முழங்க வீர வணக்கம்
X

உதகை ஆயுதப்படை வளாகத்தில்,   வீர மரணமடைந்த காவலர்களின் நினைவுத் தூணுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

உதகை ஆயுதப்படை வளாகத்தில், வீர மரணமடைந்த காவலர்களின் நினைவுத் தூணுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது..

பணியின்போது வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில், காவலர் வீரவணக்க நாளையொட்டி உதகை ஆயுதப்படை வளாகத்தில் வீர மரணமடைந்த காவலர்களின் நினைவுத் தூணுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் தலைமை தாங்கி, நினைவுத் தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் முத்துமாணிக்கம், மோகன் நவாஸ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மகேஸ்வரன், சுரேஷ் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மரியாதை செலுத்தினர். பின்னர், பணியின்போது வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு, குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.

Tags

Next Story
ai marketing future