உதகையிலுள்ள தோடரின மக்கள் வசிக்கும் கிராமத்தில் பழங்குடியினர் அமைச்சர் ஆய்வு

உதகையிலுள்ள தோடரின மக்கள் வசிக்கும் கிராமத்தில் பழங்குடியினர் அமைச்சர் ஆய்வு
X

பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தோடர் பழங்குடியின மக்களின் பாரம்பரிய கலாசார உடையணிந்து நடனமாடினார் .

பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி , விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் உள்ளூர் பகுதியில் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படும்

உதகை அருகே உள்ள பகல்கோடு மந்து பகுதியில் பழங்குடியினரால் செயல்படுத்தப்பட்டு வரும் சூழல் சுற்றுலா மையத்தை மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேரில் பார்வையிட்டு தோடர் பழங்குடியின மக்களின் பாரம்பரிய கலாசார உடையணிந்து நடனமாடினார் .

நீலகிரியில் கடந்த மூன்று நாட்களாக பழங்குடியின மக்கள் வசிக்கும் பல பகுதிகளுக்கு சென்று அடிப்படை வசதிகள் குறித்து தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார்.

இதன் ஒரு பகுதியாக உதகை அருகே உள்ள பகல்கோடு மந்து பகுதியில் தோடர் பழங்குடியினரால் செயல்படுத்தப்பட்டு வரும் சூழல் சுற்றுலா மையத்தில் அமைந்துள்ள பழங்குயினரால் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்கள் விற்பனையகத்தை பார்வையிட்டார்.இதனைத்தொடர்ந்து தோடர் பழங்குடியின மக்களின் அடிப்படை வசதிகளை கேட்டறிந்தும் குறைகளை மனுக்களாக பெற்றுக் கொண்டு அடிப்படை வசதிகளை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். தொடர்ந்து தோடர் பழங்குடியினரின் பாரம்பரிய உடை அணிந்து கலாச்சாரம் நடனமாடி பழங்குடியினருடன் உணவருந்தினார்.

பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் மனித- வன விலங்கு மோதல்களை தடுக்கும் வகையில் வனத்துறை, வருவாய் துறை மற்றும் பழங்குடியினர நலத்துறை சார்பில் கடந்த 3 நாட்களாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வனப் பகுதிகளில் அமைந்துள்ள உண்டு உறைவிடப் பள்ளிகளில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் பள்ளி வளாகத்தினுள் நுழையாமல் இருக்க தடுப்பு சுவர்கள் அமைக்கப்படும். பழங்குடியின மாணவர்களுக்கு தனி கவனம் செலுத்தி கல்வி மற்றும் விளையாட்டு உள்ளிட்டவைகளை ஊக்குவிக்கும் வகையில் உள்ளூர் பகுதியில் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படுமென அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறினார்.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!