உதகை எஸ்பி அலுவலகம் செல்லும் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

உதகை எஸ்பி அலுவலகம் செல்லும் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
X

சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்பு படையினர். 

உதகை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று மரம் அறுக்கும் எந்திரம் மூலம் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. மழை காரணமாக உதகை தாவரவியல் பூங்காவில் இருந்து போலீஸ் சூப்பிரண்டு முகாம் அலுவலகம் செல்லும் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்தது. தகவலறிந்த உதகை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று மரம் அறுக்கும் எந்திரம் மூலம் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். மேலும் தாவென செல்லும் சாலையில் 2 மரங்கள் முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மரங்களை துண்டு, துண்டாக வெட்டி அகற்றினர். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!