உதகை - கூடலூர் சாலையில் காரின் மேல் மரம் விழுந்து விபத்து
நீலகிரி மாவட்டத்தில் உதகை நகர், கூடலூர் ,குந்தா பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, கடும் குளிர் நிலவுகிறது. நீலகிரியில் மழை தொடரும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், நேற்று காலை 8.00 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் பந்தலூர், 53 மி.மீ., அப்பர் பவானி, 46 மி.மீ. பதிவாகியுள்ளது.
இந்நிலையில், ஊட்டி - கூடலூர் சாலையில், பட் பயர் என்ற இடத்தில் சாலையோரத்தில் ராட்சத மரம் சாலையின் குறுக்கே விழுந்தது. இதில், அங்கு நிறுத்தப்பட்ட கார் சேதமானது. பலத்த காற்றுடன் சாரல் மழை தொடர்வதால், மக்கள் தங்கள் பகுதியில் பாதிப்பு நேரிட்டால், வருவாய் துறையை அணுகி நிவாரண முகாமில் தங்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதேபோல், மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், மரங்களின் கீழ் நிற்கவோ வாகனங்களை நிறுத்தவோ கூடாது என, மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu