உதகையில் காய்கறி, பழ வியாபாரிகளுக்கு பயிற்சி முகாம்
முகாமில் கலந்து கொண்ட வியாபாரிகள்.
உதகை மார்கெட் பகுதியில் உள்ள அனைத்து காய்கறி மற்றும் பழங்கள் வியாபாரிகளுக்கும், உழவர் சந்தையில் வியாபாரம் செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும், ஊட்டி காபி ஹவுஸ் கூட்ட அரங்கில் பரிக்ஷன் நிறுவனத்தில் இருந்து .பிரவீன் ஆண்ட்ரூஸால், தூய்மையான காய்கறிகள் மற்றும் பழங்கள் வளாகம் என்ற திட்டத்தின் சார்பாக அடிப்படை FOSTAC பயிற்சியளிக்கப்பட்டது,
இப்பயிற்சி முகாமை மாவட்ட நியமன அலுவலர் .சி.ப.சுரேஷ் தொடங்கி வைத்தார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை எஸ்.சிவராஜ், உதகை நகராட்சி-1 உணவு பாதுகாப்பு அதிகாரி, டீ.நந்தகுமார் உதகை நகராட்சி-11 (ம) வட்டம் பகுதி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் முன்னின்று கவனித்துக் கொண்டனர்.
வேளாண்மைத்துறை (வணிகம்) நிர்வாக அலுவலர் .ரவிசந்திரன், உதகை மார்கெட் பகுதியிலுள்ள காய்கறி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் கே.எம்.மணி மற்றும் பழங்கள் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஷாதிக் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், ஊட்டி உழவர் சந்தை விவசாயிகள் உட்பட சுமார் 166 நபர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu