உதகை நகரில் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

உதகை நகரில், டி.எஸ்.பி தலைமையில் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில், வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல், இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவருமே கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டம் முழுவதும், மாவட்ட எஸ்பி அறிவுறுத்தலின்படி உதகை, குன்னூர் , கோத்தகிரி கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில், வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து, போலீசார் சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, உதகை காபி ஹவுஸ் சந்திப்பில், நகர டிஎஸ்பி மகேஸ்வரன், போக்குவரத்து துணை ஆய்வாளர் வின்சென்ட் ஆகியோர் தலைமையில், இன்று 200 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, கட்டாய தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil