உதகை ரயில் நிலையம் அருகே மரம் விழுந்தால் போக்குவரத்து பாதிப்பு

உதகை ரயில் நிலையம் அருகே மரம் விழுந்தால் போக்குவரத்து பாதிப்பு
X

தீயணைப்பு நிலைய வீரர்கள் எந்திரம் மூலம் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உதகையில் மரம் முறிந்து விழுந்ததால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. உதகை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது.

உதகை-எமரால்டு சாலையின் குறுக்கே புனித தாமஸ் ஆலயம் அருகே மரம் முறிந்து மின்கம்பி மீது விழுந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த வந்த உதகை தீயணைப்பு நிலைய வீரர்கள் எந்திரம் மூலம் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரம் அகற்றப்பட்ட பின் போக்குவரத்து சீரானது.

Tags

Next Story