உதகையில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி: நீதிபதி பங்கேற்பு

உதகையில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி: நீதிபதி பங்கேற்பு
X

உதகையில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

உதகையில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சார்பு நீதிபதி ஸ்ரீதரன் கலந்து கொண்டார்.

நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், போக்குவரத்து விதிமுறைகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி உதகை சேரிங்கிராசில் நடந்தது.

சுற்றுலா வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்களில் வந்தவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

ஆணைக்குழுவினர் மலைப்பிரதேசத்தில் மது அருந்தி வாகனம் ஓட்டக்கூடாது. சீட் பெல்ட் அணிய வேண்டும்.இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் போன்ற போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் சார்பு நீதிபதி ஸ்ரீதரன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல்கலாம் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story