உதகை மார்க்கெட் வியாபாரிகள் கொட்டும் மழையில் ஆர்பாட்டம்

உதகை மார்க்கெட் வியாபாரிகள் கொட்டும் மழையில் ஆர்பாட்டம்
X

மார்க்கெட் திறக்க வலியுறுத்தி உதகை வியாபாரிகள் கொட்டும் மழையில் போராட்டம் நடத்தினர்

மார்க்கெட் திறக்க வலியுறுத்தி உதகை வியாபாரிகள் கொட்டும் மழையில் நகராட்சிக்கெதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்

உதகை மார்க்கெட்டை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கொட்டும் மழையில் மார்க்கெட் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்

கடந்த 25ஆம் தேதி உதவி நகராட்சி மார்க்கெட் பகுதியில் உள்ள வாடகை செலுத்தாத கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் சீல் வைத்தது. இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு தங்கள் வாடகை செலுத்துவதற்கு கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து இன்று வரை கடைகள் திறக்காமல் உள்ளதால் 5 நாட்களாக வியாபாரிகளின் பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் இன்று நகராட்சி மார்க்கெட்டை திறக்க வலியுறுத்தி கொட்டும் மழையில் 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தமிழக அரசு உடனடியாக தீர்வு காண கோஷங்களை எழுப்பினர்.

மேலும் மாவட்ட நிர்வாகமும் நகராட்சி நிர்வாகமும் உடனடியாக மார்க்கெட்டை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன திடீரென மார்க்கெட் முன்பு சாலையில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!