உதகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்பாட்டம்

உதகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்பாட்டம்
X

 உதகை மத்திய பஸ் நிலையத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உதகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரியில் இருந்து மதுரை, திருச்சி செல்லும் அரசு பஸ்களில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சீனியாரிட்டி முறையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உதகை மத்திய பஸ் நிலையத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு பொதுச்செயலாளர் இப்ராஹிம் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் பஸ்களில் இருந்து இறக்கி விடப்பட்ட தொழிலாளர்களை இந்த பஸ்சுக்கு தான் செல்ல வேண்டும் என்று கடுமையாக வேலைப்பளு அளிக்கப்படுகிறது.

தொழிலாளர்களை பழிவாங்கும் போக்கை மாற்ற வேண்டும். விடுப்பு கேட்டுச் செல்லும் தொழிலாளர்களை உதாசீனப்படுத்துவது தொடர்கிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!