வார விடுமுறையால் உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

வார விடுமுறையால் உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
X
நீலகிரி மாவட்டத்தில் விடுமுறை நாளான இன்று சுற்றுலா பயணிகள் குவிந்ததால் களைகட்டிய பூங்கா.

வார விடுமுறை நாளான இன்று தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து உதகைக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்தனர்.

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த மலர்களை பார்வையிட்டு கண்டு ரசித்தனர்.

அங்கு குடும்பத்தினருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அலங்காரச் செடிகள், பூங்காவின் இயற்கை அழகு பின்னணியில் புகைப்படம் எடுத்தனர். 2-வது சீசனையொட்டி நடவு செய்யப்பட்ட மலர் செடிகளில் தற்போது மலர்கள் பூக்கத் தொடங்கி உள்ளது.

இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். பராமரிப்பு பணி காரணமாக பூங்காவில் பெரிய புல்வெளி மைதானம் மூடப்பட்டு, சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட வில்லை.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு