தொடர் விடுமுறையால் ரோஜா பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறையால் ரோஜா பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
X

ரோஜா பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

தீபாவளி தொடர் விடுமுறையால் நீலகிரிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகளால் களைகட்டும் சுற்றுலா தலங்கள்.

சர்வதேச சுற்றுலா தலங்களில் ஒன்றான நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். இங்கு அமைந்துள்ள சுற்றுலா தலங்களை காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருகை புரிகின்றனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் இரண்டாவது சீசன் நடைபெற்று வரும் நிலையில், நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் விதமாக தோட்டக்கலை துறையின் கீழ் செயல்படும் உதகை அரசு ரோஜா பூங்காவில் 3000 வகையான பல்வேறு வண்ண ரோஜா மலர்களை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு செல்கின்றனர்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக நீலகிரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வரும் நிலையில் உதகை அரசு ரோஜா பூங்காவில் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதில் பூங்காவில் மலர்ந்துள்ள ரோஜா மலர்கள் மற்றும் நிலா மாடம் முன்பும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.

தீபாவளி பண்டிகை விடுமுறை காரணமாக நேற்று ஒரே நாளில் உதகை அரசு ரோஜா பூங்காவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். மேலும் நீலகிரி மாவட்டத்தில் நிலவும் குளு குளு சீசன் காலநிலையை குடும்பத்தினருடன் அனுபவித்து வருகின்றனர்.

Tags

Next Story