நீலகிரியில் 5 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட சுற்றுலா தலங்கள்

தமிழக அரசு இன்று முதல் புதிய தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில் சுற்றுலா தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டது.

கொரோனா இரண்டாம் அலையின் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்திலுள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன.

இதன் ஒரு பகுதியான சர்வதேச புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலை சிகரம் மற்றும் ரோஜா பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களும் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்றின் காரணமாக மூடப்பட்டன.

இந்நிலையில், சுற்றுலாவை நம்பியிருந்த சாலையோர வியாபாரிகள், நடை வியாபாரிகள், வாடகை கார் ஓட்டுநர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் அனைவரும் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து காணப்பட்டனர். இந்நிலையில், தமிழக அரசு இன்று முதல் தளர்வுகளுடன் சுற்றுலா ஸ்தலங்கள் அனைத்தும் திறக்க அனுமதி அளித்துள்ளது. இதனால் அனைத்து சுற்றுலா ஸ்தலங்களிலும் வழிகாட்டு நெறி முறைகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால் உதகை அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் முககவசம் மற்றும் சமூக இடைவெளியினை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் அரசு தாவரவியல் பூங்காவில் இதனை கண்காணிக்க 15 பேர் கொண்ட கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று முதல் சுற்றுலா தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாமல் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags

Next Story
Similar Posts
சேலத்தில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி
கொங்கு வேளாளர் பாலிடெக்னிக்கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
தார்ச்சாலை இல்லாத எள்ளீஸ்பேட்டை
திருச்செங்கோட்டில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
ஆன்லைன் பத்திரப்பதிவு சேவைக்கு login செய்வது எப்படி?
உதகை மலைநகரில் எதிரொலித்த எதிர்ப்பு: சொத்து வரி உயர்வுக்கு எதிராக அதிமுக மனித சங்கிலி!
முதுமலை மக்களுக்கு மாற்றிடம் வழங்கியதில் முறைகேடு : பழங்குடியின மக்கள் புகார்..!
நீலகிரி வருவதற்கான இ பாஸ் முறையை ரத்து செய்ய  எம்.பி-யிடம் மனு...!
தெலுங்கில் மாஸ் ஹீரோவுடன் இணையும் சுந்தர் சி! வேற லெவல் கதையாம்..!
இத இத இதத்தான் எதிர்பார்த்தோம்..! ஆதிக்கை கொண்டாடும் அஜித் ரசிகர்கள்...!
உதகை படகு சவாரிக்கு கூடுதல் கட்டணம் : சும்மா கிடக்கும்  புதிய மின்சார படகுகள்..!
ஊட்டி வானில் தெரிந்த  80,000 ஆண்டு பழமையான வால்நட்சத்திரம்..!
ஊட்டி படுகர் சங்கக் கூட்டம்:  அமைச்சர் பதவி பறிப்புக்கு கண்டனம்..!
ai future project