நீலகிரி வந்த சுற்றுலா பயணிகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்ற சுற்றுலா சங்கம்
சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் வகையில் அனைத்து சுற்றுலா சங்கங்கள் சார்பாக இனிப்பு மற்றும் முககவசங்களை கொடுத்து வரவேற்றனர்.
நீலகிரியில் தோட்டக்கலை சுற்றுலா கழகத்துக்கு சொந்தமான சுற்றுலா மையங்கள் நேற்று முதல் சுற்றுலாத்தலங்கள் திறக்கப்பட்டது. கடந்த, 2020 மார்ச் 25 முதல் கொரோனா தொற்று பரவல் காரணமாக சுற்றுலா மையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. பின், சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டு திறக்கப்பட்டன.
மீண்டும் இரண்டாம் அலை பரவியதால் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மீண்டும் மூடப்பட்டன. தற்போது பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, 125 நாட்களுக்கு பிறகு நேற்று ( 23ம் தேதி) முதல் தோட்டக்கலை, சுற்றுலா கழகத்துக்கு சொந்தமான சுற்றுலா தலங்கள் திறக்கப்படுவதால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் வகையில் அனைத்து சுற்றுலா சங்கங்கள் சார்பாக இனிப்பு மற்றும் முககவசங்களை கொடுத்து வரவேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu