உதகை பைக்காரா அணையில் குஷியாக குளியல் போட்ட புலி: சமூக வலைத்தளங்களில் வைரல்

உதகை அருகே பைக்காரா அணையில் புலி குழியாக குளித்து வனத்தில் சென்ற வீடியோ வைரலாகியுள்ளது.

உதகை அருகே பைக்காரா படகு இல்லத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இங்கு மோட்டார் படகு அதிவேக படகில் பயணம் செய்து அணையை சுற்றி பார்த்து மகிழ்கின்றனர்.

அடர்ந்த வனப்பகுதியை ஒட்டிய பைக்காரா அணை பகுதியில் புலி சிறுத்தை காட்டெருமை மான் உள்ளிட்ட வன விலங்குகளும் உள்ளன.

இந்நிலையில் விடுமுறை நாளான இன்று பைக்காரா படகு இல்லத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

இதில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் படகில் செல்லும்போது அணையில் புலி தண்ணீரில் இருந்து நீராடி வனப்பகுதிக்குள் செல்லும் வீடியோவை சுற்றுலா பயணிகள் பதிவு செய்துள்ளனர். தற்பொழுது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

சுற்றுலாப் பயணிகள் அச்சத்துடன் அந்த வீடியோவை படம் பிடித்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!