ஏழ்மைக்கு மாற்றாக இலவசங்கள் இருக்க முடியாது ஊட்டியில் கமல்ஹாசன் பேச்சு
நீலகிரி : உதகை சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து ஊட்டி ஏ.டி.சி திடலில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட மக்கள் நீதி மையம் தலைவர் கமல் ஹாசன் பேசியதாவது:
தமிழகத்தில் ஊழல் ஆட்சியை மாற்றி சீரமைக்க மற்றொரு ஊழல் கட்சியாக இருக்க முடியாது. கடந்த 50 ஆண்டுகளில் கட்சிகள் வளர்ச்சியடைந்துள்ளது ஆனால் நாட்டில் பெரிய வளர்ச்சி நடக்கவில்லை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீலகிரி மாவட்ட மக்கள் பயனடைகின்ற வகையில் குளிரூட்டும் காய்கறி சேமிப்பு மையங்கள் ஏற்படுத்தப்படும்.
தோட்ட தொழிலாளர்கள் ஆதாய விலை சம்பளமாக நிர்ணயிக்கப்படும், மாவட்டத்தில் உள்ள பழங்குடி மக்கள் மேம்படும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடையே பேசிய அவர், தேர்தல் ஆணையத்தின் பணிகள் சிறப்பாக உள்ளதாகவும், அவர்கள் தங்களது பணியை செய்வதாக கூறினார்.
பல்வேறு முக்கிய பிரமுகர்கள் இடங்களில் வருமான வரி துறை மேற்காண்டு வரும் சோதனைக் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், சோதனைகள் மேற்கொள்வதில் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் என்றார். தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளை தாம் கருத்து திணிப்பாகவே பார்ப்பதாக அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu