உதகையில் இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த ஆவணங்கள் திருட்டு: போலீசார் விசாரணை

உதகையில் இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த ஆவணங்கள் திருட்டு: போலீசார் விசாரணை
X

கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்ம நபர் உருவம்.

உதகையில் பிரதான சாலையில் நிறுத்தப் பட்டிருந்த இரு சக்கர வாகனத்திலிருந்த பையை திருடிய மர்ம நபர்

உதகை நகர கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வருபவர் அபு. இவர் உதகை கிரீன்பீல்டு பகுதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றார்.

பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டு இருந்த அலுவலக சம்பந்தப்பட்ட ஆவணங்கள் திருடு போனது தெரியவந்தது.

உடனடியாக அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் இருந்து அரசு ஆவணங்களை திருடி சென்றது பதிவாகி இருந்தது.

இதுகுறித்து அபு உதகை நகர மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!