நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 62.68 சதவீதம் வாக்குப்பதிவு

நீலகிரி மாவட்டத்தில் மொத்தம்  62.68 சதவீதம் வாக்குப்பதிவு
X
The turnout in the Nilgiris district was 62.68 percent

நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் 291 வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது.

ஊட்டி நகராட்சியில் 55.14 சதவீதம், குன்னூர் நகராட்சியில் 63.15 சதவீதம், கூடலூர் நகராட்சியில் 62.77 சதவீதம், நெல்லியாளம் நகராட்சியில் 64.23 சதவீதம் மொத்தம் 59.98 சதவீத வாக்குகள் பதிவானது.

அதிகரட்டி பேரூராட்சியில் 66.48 சதவீதம், பிக்கட்டி பேரூராட்சியில் 67.11 சதவீதம், தேவர்சோலை பேரூராட்சியில் 69.83 சதவீதம், உலிக்கல் பேரூராட்சியில் 67.26 சதவீதம், ஜெகதளா பேரூராட்சியில் 64.48 சதவீதம், கேத்தி பேரூராட்சியில் 63.43 சதவீதம், கீழ்குந்தா பேரூராட்சியில் 68.63 சதவீதம், கோத்தகிரி பேரூராட்சியில் 62.73 சதவீதம், நடுவட்டம் பேரூராட்சியில் 66.13 சதவீதம், ஓவேலி பேரூராட்சியில் 65.89 சதவீதம், சோலூர் பேரூராட்சியில் 75.14 சதவீதம் மொத்தம் 66.29 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகளில் 54,064 ஆண்கள், 56,128 பேர் பெண்கள் மொத்தம் 1,10,192 வாக்காளர்கள் வாக்களித்தனர். 11 பேரூராட்சிகளில் 45,040 ஆண்கள், 46,235 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 91,276 வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 99,104 ஆண் வாக்காளர்கள், 1,02,363 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 2,01,468 வாக்காளர்கள் வாக்களித்தனர்.

62.68 சதவீத வாக்குபதிவானது. நீலகிரியில் தேர்தல் நடந்த 15 உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 3,21,409 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,19,941 பேர் தேர்தலில் ஓட்டு போடவில்லை.

Tags

Next Story