அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி என்று நடிகை நமீதா தெரிவித்தார்

நீலகிரி மாவட்டத்தில் தீவிர பிரசாரம் செய்து வரும் நடிகை நமீதா தமிழகம் எங்கும் நல்ல வரவேற்பு உள்ளது. அதிமுக ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டதது என தெரிவித்தார்.

உதகை சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து நடிகை நமீதா இன்று உதகையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.சட்டமன்ற தொகுதி வேட்பாளராக தேர்ந் தெடுக்கப்பட்டால் இம் மாவட்டத்தை உலக சுற்றுலா தலங்களில் முக்கியமானதாக திகழ பாடுபடுவார்

மேலும் மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்துள்ள திட்டங்கள் உங்களிடையே சரியான முறையில் சென்றடைய தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். பின்பு கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணியே முன்னணியில் உள்ள நிலையில் அதிமுக வெற்றி பெறுமா எனக் கேட்டபோது

நிச்சயமாக பா.ஜ.க அதிமுக கூட்டணி வெற்றி பெறும் தாமரையை பற்றி மக்களிடையே நல்லதொரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என கூறினார். நிச்சயமாக அதிமுக, பா.ஜ.க கூட்டணி வெற்றி பெறும் என தெரிவித்தார்.

Tags

Next Story
ai marketing future