உதகையில் குழிக்குள் தவறி விழுந்த குதிரை பலி

உதகையில் குழிக்குள் தவறி விழுந்த குதிரை பலி
X

பலியான குதிரை.

உதகை நகரில் குதிரை போன்ற கால்நடைகள் உலா வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும், அதன் உரிமையாளர்கள் பின்பற்றாமல் உள்ளனர்.

உதகை கமர்சியல் சாலையோரத்தில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன் முன்பு மின்கம்பம் நடுவதற்காக குழி தோண்டப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சாலையில் நடமாடிய குதிரை ஒன்று குழிக்குள் தவறி விழுந்து இறந்தது. நேற்று வழக்கம்போல் அந்த வழியாக பொதுமக்கள் நடமாடிய போது, கடும் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் நகராட்சி ஊழியர்கள் குழிக்குள் விழுந்து இறந்த குதிரையை வாகனத்தில் ஏற்றி தீட்டுக்கல் குப்பை கிடங்குக்கு கொண்டு சென்றனர். உதகை நகரில் குதிரை போன்ற கால்நடைகள் உலா வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும், அதன் உரிமையாளர்கள் பின்பற்றாமல் உள்ளனர். இதனால் வளர்ப்பு குதிரைகள் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரிவது தொடர்கதையாக உள்ளது.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி