உதகை ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்த காட்டெருமை: வனத்துறையினர் விரட்டியடிப்பு

உதகை ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்த காட்டெருமை: வனத்துறையினர் விரட்டியடிப்பு
X
சமீபகாலமாக உதகை நகரில் காட்டெருமைகளின் நடமாட்டம் இருந்து வரும் நிலையில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒற்றை காட்டெருமை உலா

உதகை நகரை சுற்றி தொட்டபெட்டா, கேர்ன்ஹில் கவர்னர்சோலை, மார்லிமந்து உள்ளிட்ட வனப்பகுதிகள் உள்ளது. இங்கு காட்டெருமை, சிறுத்தை, கடாமான் போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. அவ்வப்போது வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி நகருக்குள் புகும் நிலை உள்ளது.

இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஒற்றை காட்டெருமை உதகை கலெக்டர் அலுவலக பகுதிக்கு வந்தது. பின்னர் வளாகத்திற்குள் புகுந்த காட்டெருமை அங்கிருந்த புற்களை மேய்ந்தது.

தொடர்ந்து அருகே பி.எஸ்.என்.எல். அலுவலக பகுதிக்கு சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் நகருக்குள் புகுந்த காட்டெருமையை வனப்பகுதிக்குள் விரட்ட சம்பவ இடத்துக்கு வந்தனர். பி.எஸ்.என்.எல். அலுவலக பகுதியில் இருந்து நடைபாதை வழியாக கீழே சென்றது. பின்னர் வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, கூட்டத்தில் இருந்து பிரிந்த காட்டெருமை ஒன்று நகருக்குள் நுழைந்தது. வழிதவறி வந்து இருக்கலாம் என்றனர். உதகையில் பகல் நேரத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் புகுந்த காட்டெருமையால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!