கவர்னர் வருகையின் போது ஒத்துழைத்த மக்களுக்கு நன்றி: காவல்துறை

கவர்னர் வருகையின் போது ஒத்துழைத்த மக்களுக்கு நன்றி: காவல்துறை
X

கவர்னரின் கார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு கடந்த 15-ம் தேதி குடும்பத்தினருடன் வந்த தமிழக கவர்னர் இன்று திரும்பிச் சென்றார்.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு கடந்த 15-ம் தேதி வந்த தமிழக கவர்னர் இன்று திரும்பி சென்றார். அவர் வருகையின் போது காவல்துறையின் போக்குவரத்து விதிமுறைகளை மதித்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் தமிழக கவர்னர் பயணத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்து, காவல்துறைக்கு மிகவும் ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து பொதுமக்களுக்கும் மாவட்ட காவல்துறை சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags

Next Story
ai automation in agriculture