நீலகிரியில் பதற்றமான வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது: மாவட்ட ஆட்சியர்

நீலகிரியில் பதற்றமான வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது: மாவட்ட ஆட்சியர்
X

பைல் படம்.

4 நகராட்சிகளில் 208 வாக்குச்சாவடிகள், 11 பேரூராட்சிகளில் 201 வாக்குச்சாவடிகள் மொத்தம் 409 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19.2.2022 அன்று நடைபெறுகிறது. 4 நகராட்சிகளில் 208 வாக்குச்சாவடிகள், 11 பேரூராட்சிகளில் 201 வாக்குச்சாவடிகள் மொத்தம் 409 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. வாக்குப்பதிவு நடைபெற உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து காவல்துறை மூலம் கண்டறியப்பட்டு உள்ளது. 4 நகராட்சிகள், 2 பேரூராட்சிகளில் மொத்தம் 55 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளது. வாக்குப்பதிவு அன்று கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடவடிக்கைகளை கண்காணிக்க 61 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture