உதகையில் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

உதகையில் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்
X

 போராட்டத்தில் ஈடுபட்ட, உதகை மகாலிங்கா கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை தொழிலாளர்கள்.

நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்த பின், தொழிலாளர்களின் போராட்டம் கைவிடப்பட்டது.

நீலகிரி மாவட்டம் பாலகொலா பகுதியில், மகாலிங்கா கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் தொழிலாளர்கள் 150 பேர் பணிபுரிந்து வருகின்றனர். தொழிற்சாலை நிர்வாகம், தொழிலாளர்களுக்கு வேலை வழங்காததால் தொழிலாளார்கள் ஆவேசம் அடைந்தனர்.

தொழிற்சாலைக்கு, பச்சை தேயிலை வரத்து குறைந்ததால் வேலையில்லை என்று நிர்வாகம் கூறியது. இதனால் தினமும் வேலை வழங்கக்கோரி, தேயிலை தொழிற்சாலை அருகே சாலை மறியலில் ஈடுபட முயற்சித்தனர்.

லவ்டேல் போலீசார், போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் மற்றும் தொழிற்சாலை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தனர். பின்னர் தொழிலாளர்கள் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!