உதகையில் தவக்கால பரிகார பவனி: ஏராளமான மக்கள் பங்கேற்பு

உதகையில் தவக்கால பரிகார பவனி: ஏராளமான மக்கள் பங்கேற்பு
X

நீலகிரி மாவட்ட ரோமன் கத்தோலிக்க திருச்சபை சார்பில் நடைபெற்ற தவக்கால பரிகார பவனி.

நீலகிரி மாவட்ட ரோமன் கத்தோலிக்க திருச்சபை சார்பில் தவக்கால பரிகார பவனி நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட ரோமன் கத்தோலிக்க திருச்சபை சார்பில், தவக்கால ஐந்தாவது ஞாயிற்றுக்கிழமையையொட்டி இயேசுவின் சிலுவை பாடுகளை நினைவுகூறும் பொருட்டு தவக்கால பரிகார பவனி நடைபெற்றது.

தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் இருந்து தொடங்கி சேரிங்கிராஸ், டஸ்டேட் வங்கி, அரசு ஆஸ்பத்திரி சாலை, மேரிஸ் ஹில் ரோகிணி சந்திப்பு, காந்தல் முக்கோணம் வழியாக குருசடி திருத்தலம் வரை சென்றது. பவனியில் இயேசு வேடமணிந்த ஒருவர் சிலுவையை சுமந்து சென்றார்.

கிறிஸ்தவர்கள் பாடல்களை பாடி நடந்து சென்றார்கள். காந்தல் குருசடி திருத்தலத்தில் நீலகிரி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் கூட்டு பாடல் திருப்பலி நடந்தது.

உலகில் நிலவும் உக்ரைன், ரஷ்யா போரில் அமைதி நிலவ வேண்டும் என்று சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. இதில் முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ், பங்கு தந்தைகள் அமிர்தராஜ், ஸ்தனிஸ், செல்வநாதன், பெனடிக்ட் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!