தமிழ்நாடு தோட்டக்கலை பண்ணை பூங்கா ஊழியர்சங்க ஆலோசனைக் கூட்டம்
பைல்படம்
தமிழ்நாடு தோட்டக்கலை பண்ணை மற்றும் பூங்கா ஊழியர் சங்கம் சார்பில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு நீலகிரி மாவட்ட தலைவர் வாசுதேவன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார்.
நீலகிரியில் 14 தோட்டக்கலைப் பண்ணைகள் மற்றும் பூங்காக்களில் நிரந்தர ஊழியர்கள் என 750 பேர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் பூங்காக்கள், பண்ணைகளின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகின்றனர். கூட்டத்தில், பணியாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் முன்தேதியிட்டு வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும். தற்போது சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.இதை மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கல்வித்தகுதி அடிப்படையில் 150 காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். நீண்ட காலமாக பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.
இறப்பு கால குடும்ப பாதுகாப்பு நிதி, அரசால் குறைந்தபட்ச ஓய்வூதியம், பணிக்கொடை ஆகியவை ஓய்வு பெற்ற மற்றும் இறந்த பணியாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்த கோரிக்கைகள் தொடர்பாக முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிக்க முடிவு செய்யப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu