தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை உதகை வருகிறார்

தமிழக ஆளுநர்  ஆர்.என்.ரவி நாளை உதகை வருகிறார்
X

பைல் படம்

உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை பார்வையிட உள்ளார்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை உதகமண்டலம் வருகிறார்.

மாநில கவர்னர் ஆர்.என்.ரவி, 5 நாள் சுற்றுப்பயணமாக உதகை வருகிறார்.தனி விமானம் மூலம் கோவை வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாளை உதகை வருகிறார். பின், ராஜ்பவனில் தங்குகிறார். குடும்பத்துடன் வரும் கவர்னர், ஐந்து நாட்கள் தங்க இருப்பதால், உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா ஸ்தலங்களை பார்வையிட உள்ளார்.அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.ஆனால், 19 -ஆம் தேதி உதகையிலிருந்து சென்னைக்கு புறப்படுகிறார். கவர்னர் வருகையை யொட்டி, 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!