உதகை நகராட்சியில் தடுப்பூசி செலுத்தியவர்களின் விபரம் கணக்கெடுப்பு

உதகை நகராட்சியில் தடுப்பூசி செலுத்தியவர்களின் விபரம் கணக்கெடுப்பு
X

உதகை நகராட்சியில் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் நகராட்சி ஊழியர்கள்.

நீலகிரியில் அனைத்து பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்திய மற்றும் செலுத்தாத நபர்கள் கணக்கெடுப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உதகமண்டலம் நகராட்சி சார்பில் உதகை நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி உத்தரவின்படி கொரோனா தடுப்பூசி செலுத்திய மற்றும் செலுத்தாத நபர்கள் கணக்கெடுக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

நீலகிரி மாவட்டம் முழுவதும் மாவட்ட நிர்வாகமானது தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் உதகை நகரில் தடுப்பூசி செலுத்தியவர்கள் மற்றும் செலுத்தாதவர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி உதகமண்டலம் நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அனைத்து வார்டுகளிலும் வீடு வீடாகச் சென்று நகராட்சி ஊழியர்கள் இந்த கணக்கெடுப்புப் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!