உதகை: சமூக விரோதிகளின் கூடாரமாகும் பள்ளி மைதான பகுதி

உதகை: சமூக விரோதிகளின் கூடாரமாகும்   பள்ளி மைதான பகுதி
X
மது பாட்டில்கள் மற்றும் அசுத்தம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை.

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் பள்ளி மைதான நுழைவுவாயில் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது

உதகை நகர மையப்பகுதியில் அமைந்துள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியை ஒட்டியுள்ள அரசு மைதானம் செல்லும் நுழைவு வாயில் பகுதியில் மது பாட்டில்கள் மற்றும் அசுத்தம் காணப்படுகிறது. இதனால் பள்ளி மாணவிகள் நுழைவுவாயில் பகுதியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே மாலை நேரங்களில் நுழைவு வாயில் பகுதியில் மது அருந்துவோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது. அதேபோல் பள்ளியை ஒட்டிய பகுதியில் இதுபோன்ற அசுத்த பகுதியாக காட்சியளிப்பதால் துர்நாற்றம் வீசுவதாக பொது குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்