உதகை: போக்சோ வழக்கில் ஒருவர் கைது

உதகை: போக்சோ வழக்கில் ஒருவர் கைது
X
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக பாலமுருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.

உதகை புதுமந்து பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (26), கூலித்தொழிலாளி. இவர் ஊட்டி அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த பிளஸ்-2 மாணவியை காதலித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலமுருகன் பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பிளஸ்-2 மாணவிக்கு கூலித்தொழிலாளி பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. பின்னர் பாலமுருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!