உதகை நகராட்சி சார்பில் கொரோனா பாதித்தோருக்கு கபசுர குடிநீர் வழங்கல்

உதகை நகராட்சி சார்பில் கொரோனா பாதித்தோருக்கு கபசுர குடிநீர் வழங்கல்
X

நகராட்சி சார்பில் வழங்கப்பட்ட கபசுர குடிநீர்.

உதகையில் கொரோனா நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நகராட்சி மூலம் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக உதகை குட் ஷேப்பர்டு பள்ளி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.

இங்கு 189 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மையத்தில் கொரோனா பாதித்த நோயாளிகள் 100-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உதகை நகராட்சி சார்பில், சிகிச்சை மையத்தில் உள்ள நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மற்றும் நோயிலிருந்து குணமடைய கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

மூலிகைகள் அடங்கிய கபசுர குடிநீர் தினமும் குறிப்பிட்ட அளவு அருந்துவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

மேலும் உதகையில் தொற்று பாதித்த இடங்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு சுகாதார பணிகள் நகராட்சி மூலம் நடந்து வருகின்றன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!