உதகையில் பா.ஜ.க வினர் கப சுர குடிநீர் வழங்கல்

உதகை நகரில் பல பகுதிகளில் பா.ஜ.க சார்பில் பொதுமக்களுக்கு கப சுர குடிநீர் வழங்கப்பட்டது.

கொரோனோ இரண்டாம் அலை வேகம் எடுத்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்.இதன் ஒரு பகுதியாக உதகை நகரில் பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் சபரிஸ் தலைமையில் உதகை ஏடிசி பேருந்து நிலையத்தில் ஆயிரம் பேருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

தொடர்ந்து நகர்புறத்தில் மாரியம்மன் கோவில் , மத்திய பேருந்து நிலையம் , சேரிங் கிராஸ் பகுதி, உழவர் சந்தை, மார்க்கெட் மணிக்கூண்டு, உள்ளிட்ட இடங்களில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வில் பா.ஜ.க பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் சபரிஸ் நகர தலைவர் பிரவீண், நகர செயலாளர் சுரேஷ், உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கான கபசுரக் குடிநீர் வழங்கினர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!