வெயிலுக்கு நிழற்குடையாக மாறிய கட்சி கொடி

வெயிலுக்கு நிழற்குடையாக மாறிய கட்சி கொடி
X

ஊட்டியில் தேர்தல் பரப்புரையின் போது கடும் வெயிலில் இருந்த தொண்டருக்கு நிழலாக கட்சிக்கொடி மாறியது.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஊட்டியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது கடும் வெயிலிலும் ஏராளமான அதிமுக மற்றும் பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.இதில் நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.பாஜக தொண்டர் ஒருவர் கொடியை தனக்கு குடையாக பயன்படுத்தி நிழலை ஏற்படுத்திக் கொண்டார். தற்போது இந்த வித்தியாசமான புகைப்படம் வெயிலில் இருந்து தன்னைக் காக்கும் நிழல் குடையாக மாறிய கொடி என பகிரப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!