ஜெனரேட்டலிருந்து வெளியேறிய புகையால் மூச்சு திணறல்: உதகை அருகே இருவர் பலி
உதகை அருகேயுள்ள சோலூர் கிராமத்தில் நடைபெற்ற விழாவையொட்டி இரவில் தங்கிய அறையில் மூச்சு திணறல் ஏற்பட்டு இருவர் மரணமடைந்தனர். மேலும் மூவர் தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். வழிப் பாட்டு தலத்தில் இரவில் தங்கியிருந்த போது பலத்த காற்று வீசியதால் மின் தடை ஏற்பட்டது.
ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்தினர். அப்போது ஜெனரேட்டலிருந்து வெளியேறிய புகை, தங்கிய அறை முழுவதும் பரவியது. இதில், சிலர் கண் அயர்ந்து உறங்கியதால் புகை சூழ்ந்து மூச்சு திணறலால் சிலர் மயக்கமடைந்தனர். அதிகாலையில் அங்கு வந்த கிராம மக்கள் மயக்கமடைந்த நிலையில் இருந்த 5 பேரை மீட்டு, ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இதில், சுபாஷ், 36, மூர்த்தி, 48, ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.
மற்ற மூன்று பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu