உதகை படகு இல்லத்தில் திடீர் கட்டண உயர்வு, சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி
உதகை படகு இல்லம்
தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் சுற்றுலா பயணிகள் பயணம் செய்யும் படகுகளுக்கு 15 சதவீதம் கட்டண உயர்வு உயர்த்தியுள்ளதால், உயர்த்தப்பட்ட கட்டணத்தை குறைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சுற்றுலா நகரமான உதகையில் அரசு தாவரவியல் பூங்கா, அரசு ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலை சிகரம் ஆகிய முக்கிய சுற்றுலா தலங்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.
தற்பொது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த சுற்றுலா தலங்கள் அனைத்தும் கடந்த 23-ம் தேதி முதல் திறக்கப்பட்டன.
இந்நிலையில், உதகையில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான உதகை படகு இல்லத்தில் திடீரென சுற்றுலா பயணிகள் பயணம் செய்யும் படகுகளுக்கு 15 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதில் 8 நபர்கள் பயணம் செய்யும் படகு 610 ரூபாயிலிருந்து 800 ரூபாயாகவும் 10 நபர்கள் பயணம் செய்யும் படகு 810 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாகவும் மற்றும் 15 நபர்கள் பயணம் செய்யும் படகு 1, 115 ரூபாயிலிருந்து 1,400 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu