பூச்சி, நோய் பாதிப்புகள் குறித்து தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் ஆய்வு

பூச்சி, நோய் பாதிப்புகள் குறித்து தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் ஆய்வு
X

ஆய்வில் ஈடுபட்ட தோட்டக்கலை ஆராய்ச்சியாளர்கள். 

பூச்சி மற்றும் நோய் பாதிப்புகள் குறித்து உதகை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி ராஜா தலைமையில் ஆய்வு நடந்தது.

குன்னூர் வட்டார தோட்டக்கலைத்துறையின் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் தோட்டக்கலை உதவி இயக்குனர் பெபிதா உத்தரவின்படி விஞ்ஞானி மற்றும் விரிவாக்க அலுவலர்களின் கூட்டுக்குழு ஆய்வு நடந்தது. இதன் முக்கிய நோக்கம், இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் காந்தி பேட்டை, தாம்பட்டி, கொல்லிமலை பகுதிகளில் இயற்கை வேளாண்மை செய்து வரும் விவசாயிகளின் விளைநிலங்களில் பூச்சி மற்றும் நோய் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தனர். உதகை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி ராஜா தலைமையில் வேளாண்மை விரிவாக்க அலுவலர்கள் இணைந்து இந்த ஆய்வினை மேற்கொண்டனர்.

அதற்கான தீர்வு இயற்கை இடு பொருட்களின் மூலம் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்பட்டது. விஞ்ஞானி விவசாயிகளின் தோட்டத்துக்கு நேரடியாக வந்து ஆய்வு செய்து பிரச்சனைக்கான தீர்வு அளித்தது, விவசாயிகளுக்கு மேலும் ஊக்கம் அளித்தனர். ஆய்வின்போது உதவி தொழில்நுட்ப மேலாளர் ஜான் போஸ்கோ, அபினேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!