கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டி போராட்டம்

கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டி போராட்டம்
X

உதகை நகராட்சியில் கொரோனா பணியாற்றிய பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் செய்தனர்.

கொரோணா காலக்கட்டத்தில் உதகை நகரில் களப்பணியாற்றிய 250 க்கும் மேற்பட்டோருக்கு ஊதியம் வழங்கவில்லை என பணியாளர்கள் வேதனை.

கொரோனா தொற்றின்போது உதகை நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கான ஊதியம் வழங்க வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உதகை நகராட்சிற்குட்பட்ட 36 வார்டுகளில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணிக்காக ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர்.

இதற்காக நாள் ஒன்றுக்கு ரூபாய் 650 வீதம் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சுமார் 250 ஊழியர்கள் நியமிக்கப்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் ஒரு மாதம் கூட ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், மேலும் இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் சரஸ்வதியிடம் கேட்டால் முறையான எந்த தகவல்களும் தெரிவிக்கப்படாமல் மெத்தன போக்குடன் பதில் அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

எனவே வரும் திங்கள்கிழமை தங்களுக்கு ஊதியம் தரவில்லை என்றால் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்த போவதாக தெரிவித்துள்ளனர்.


Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil