உதகையில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாம்

உதகையில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாம்
X
100 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்ததற்கு பாராட்டு தெரிவிக்கின்ற வகையில் உதகையில் இன்று சிறப்பு கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது

இந்தியா 100 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி சாதனை படைத்ததற்கு பாராட்டு தெரிவிக்கின்ற வகையில் உதகையில் இன்று சிறப்பு கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இந்திய செஞ்சிலுவைச்சங்கம், ஜெயின் சங்கம் மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் உதகை மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் மனோகரி ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் நீலகிரி மாவட்ட தலைவர் கேப்டன் மணி பேசும்போது, பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் 100 கோடி மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தி சாதனை படைத்ததற்காக இந்த கண் சிகிச்சை முகாம் நடத்தப்படுவதாகவும், இதுவரை 400க்கு மேற்பட்ட மருத்துவ முகாம்களை செஞ்சிலுவை சங்கம் சார்பில் நடத்தியிருப்பதாகவும், இது போன்ற மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

நிகழ்ச்சியில் உதகமண்டல ஜெயின் சங்க பிரதிநிதிகள், மருத்துவமனை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Tags

Next Story