குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் திறன் வளர்ப்பு பயிற்சி

நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் துறை சார்ந்தவர்கள் பயிற்சி முகாம் எச்ஏடிபி கூட்டரங்கில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில், துறை சார்ந்தவர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் எச்.ஏ.டி.பி. கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரபு தலைமை வகித்து பேசியதாவது: நீலகிரியில் கொரோனா பாதிப்பு காரணமாக குழந்தை திருமணங்கள் அதிகரித்து உள்ளது. இதனால் சமூக பிரச்சினை ஏற்படும். வீட்டில் இருந்து வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் குழந்தைகளை அக்கம் பக்கத்தினரிடம் விட்டு செல்ல வேண்டாம். அரசு பஸ்களில் பயணிக்கும் போது, மற்றவர்களை நம்பி குழந்தைகளை கொடுக்க வேண்டாம். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை பெரும்பாலும் தெரிந்தவர்கள் மூலம் நடக்கிறது.

நீலகிரியில் கடந்த ஆண்டு 51 போக்சோ வழக்குகள் பதிவானது. நடப்பாண்டில் 6 மாதத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள் 2 மடங்காக அதிகரித்து உள்ளது. இதுவரை 65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து 1098 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் ஊராட்சி தலைவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!