சகோதரியின் கணவரை கொன்றவருக்கு 7 ஆண்டு சிறை

சகோதரியின் கணவரை கொன்றவருக்கு 7 ஆண்டு சிறை
X

குன்னூரில் கடந்த 2014 ம் ஆண்டு மூத்த சகோதரியின் கணவரை விஷம் வைத்து கொன்றவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள மேல் கரன்சி பகுதியை சேர்ந்த தனியார் எஸ்டேட் காவலாளி ரவிச்சந்திரன் (50). இவரது மனைவி பூங்கோதை. இவர்களுக்கு 15 வயதில் மகன் உள்ளான்.கடந்த 2014 ம் ஆண்டில் ரவிச்சந்திரன் திடீரென காணாமல் போயுள்ளார். இது குறித்து ரவிச்சந்திரனின் அண்ணன் கருத்தப்பாண்டி தனது தம்பியை காணவில்லை என்று மேல்குன்னூர் போலீசில் புகார் அளித்தார். இதற்கிடையே ஒரு தனியார் எஸ்டேட்டில் எரிந்த நிலையில் உடல் ஒன்று புதைக்கபட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது .

அதன் பேரில் போலீசார் அங்கு சென்று உடலை தோண்டி எடுத்து கருத்தபாண்டியிடம் அவரது தம்பி தானா என்று போலீசார் உறுதி செய்த பின் அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் ரவிச்சந்திரனின் மனைவி பூங்கோதை அவரது தம்பி வனராஜ், அவரது மகன் ஆகியோரை பிடித்து விசாரித்த போது இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து ரவிச்சந்திரனை விஷம் வைத்து கொன்று பின்னர் எரித்து புதைத்தது தெரிய வந்தது.

வழக்கு பதிந்து அவர்களை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு ஊட்டி மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அருணாசலம், ரவிச்சந்திரனை எரித்து கொன்ற வனராஜுக்கு 7 ஆண்டு சிறைதண்டனை, ரூ. 2000 அபராதம் விதித்தார். அபராதம் கட்ட தவறும் பட்சத்தில் ஓர் ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியதோடு தகுந்த ஆதாரம் இல்லாததால் மனைவி பூங்கோதையை வழக்கிலிருந்து விடுவித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு வழக்கறிஞராக மாலினி பிரபாகரன் வாதாடினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!